News September 16, 2025

திருப்பத்தூர்: தலைகுப்புற கவிழ்ந்து பிக்கப் வாகனம் விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கூட்ரோடு டோல்கேட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (செப்.15) டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் தாறுமாறாக சென்று தடுப்புச் சுவர் மீது மோதி கோர விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். நாட்றம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News September 16, 2025

திருப்பத்தூரில் வெளுத்து வாங்க போகும் கனமழை

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

திருப்பத்தூர்: குற்றவாளிகளை உ.பியில் தட்டி தூக்கிய போலீஸ்

image

ஆம்பூர் தாலுகா அருங்கல் துருகம் அருகே காவலாளி ஆஸ்கார் பாஷாவை கடந்த 10 தேதி கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு தப்பி ஓடிய கொலையாளிகள் அணில் குமார், அத்தி ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் இன்று (செப்.16) காலை கைது செய்து உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

News September 16, 2025

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செப்-15 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ” போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும், தொடர்ந்து 29 நாட்களாக போராட்டம் செய்யும் ஊழியர்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்” என கோஷங்கள் எழுப்பினர்.

error: Content is protected !!