News March 26, 2025
திருப்பத்தூர் – சொக்கவைக்கும் பேரழகு

ஏலகிரி – அழகிய மலைவாசஸ்தலம். ட்ரெக்கிங் மற்றும் பாராகிளைடிங் மிகவும் பிரபலம். ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி – பல்வேறு மூலிகை செடிகளை கடந்து செல்வதால் இந்த அருவியில் குளித்தால் நோய்கள் குணமாகும். வைன்னு பாப்பு அப்சர்வட்டரி – இந்தியாவின் மிகப்பெரிய ஆப்டிகல் தொலைநோக்கி, சுவாமிமலை – ட்ரெக்கிங் ஸ்பாட், நிலாவூர் ஏரி – ரம்மியமான அமைதியான இடம், கோவிந்தபுரம் அருவி – ஆர்ப்பரிக்கும் அழகு. ஷேர் செய்யுங்கள் மக்களே!
Similar News
News April 9, 2025
ரயில் மோதி முதியவர் பலி

குடியாத்தம் ரயில் நிலையத்தில் நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்பொழுது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் மோதியத்தில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News April 9, 2025
இரவு ரோந்து பணியில் காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று (08-04-2015) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் தங்களின் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் அசம்பாவிதம் மற்றும் குற்ற செயல்கள் குறித்து தங்களின் காவல் எல்லை பகுதிகளில் கொடுக்க கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
News April 8, 2025
வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (08-04-2025) விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் வாகனங்களில் செல்லும்போது செல் போன் பேச வேண்டாம் என்றும் அவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை அலட்சியமாக ஓட்டினால் அது விபத்து ஏற்படுத்த வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.