News January 7, 2026
திருப்பத்தூர்: செவிலியர் மீது ஏறிய லாரி!

ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (30). பெங்களுருவில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று (ஜன.6) இரவு ஆம்பூர் கோவிந்தபுரம் நெடுஞ்சாலையில் இரவு 11 மணியளவில் ஓட்டிவந்த பைக் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 10, 2026
திருப்பத்தூர்: பொங்கல் பரிசு மெசேஜ் வந்தால்..,உஷார்!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘பொங்கல் பரிசு, பொங்கல் வாழ்த்து, பொங்கல் சலுகைகள் என்று அரசின் பெயரிலோ முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link, APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம்’ என அறிவித்துள்ளது. உங்களுக்கு அப்படி மெசேஜ் வந்தால் 1930-வை அழைக்கவும்.(SHARE)
News January 10, 2026
திருப்பத்தூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

திருப்பத்தூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
ஜோலார்பேட்டை ஹான்ஸ் பாக்கெட் விற்பனை செய்தவர் கைது

ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் இன்று (ஜன.9) ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர் அப்போது சின்ன மூக்கனூர் பகுதியில் சரவணன் என்பவரின் மளிகை கடையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்பனை செய்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்தனர்


