News January 3, 2026

திருப்பத்தூர்: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில் mylpg என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News January 22, 2026

ஆம்பூர் அருகே விபத்து; ஒருவர் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் செங்கிளி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஜன.15ஆம் தேதி நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்(40) கூலி தொழிலாளி வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி பைக்கில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

News January 22, 2026

திருப்பத்தூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 22, 2026

திருப்பத்தூர்: ஊராட்சி தலைவர் பவர் பறிப்பு

image

கந்திலி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக மலர் தண்டபாணி மற்றும் துணைத்தலைவர் சின்னதம்பி இருவருக்கும் இடையே அதிகார போட்டி இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை முகமை இயக்குனர் உமாமகேஸ்வரிக்கு புகார் வந்த நிலையில், விசாரணை செய்து ஆட்சியரிடம் தெரிவித்தனர். நேற்று (ஜன-21) ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி, உத்தரவுபடி தலைவர் மற்றும் துணைத்தலைவர் செக் பவர் பறிக்கப்பட்டது.

error: Content is protected !!