News October 31, 2025
திருப்பத்தூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற

திருப்பத்தூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
Similar News
News October 31, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (அக்.31) திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு இணையதளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இணையதளத்தில் வரும் போலியான வாடிக்கையாளர் எண்களை நம்பி அவர்களிடம் பேசி உங்களது பணத்தை இழக்க வேண்டாம். வாடிக்கையாளர் எண்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்து பின் தொடர்பு கொண்டு பேசவும். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது.
News October 31, 2025
திருப்பத்தூர்: 12 சிவலிங்கங்கள் உள்ள அற்புதக்கோயில்

பிரம்மபுரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்து கோயில். இதனை 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் இந்தக் கோயிலைப் பற்றியும், பிரம்மபுரீஸ்வரரைப் பற்றியும் தன் பாடல் மூலம் புகழ்ந்துள்ளார். பின் வளாகத்தில் சுயம்பு லிங்க வடிவில் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் தேவி பிரம்ம சம்பத் கௌரி தலைமை தெய்வங்களாக உள்ளனர். பின் கோயிலில் 12 சிவலிங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
திருப்பத்தூர்: ஆத்தாடி எவ்ளோ பெரிய பாம்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக் கொல்லை பகுதியில் நேற்று (அக்.30) இரவு அருள் சீனிவாசன் என்பவர் கோழி பண்ணைக்கு அருகில் சுமார் 15 அடி நீளம் மலைப்பாம்பு இருந்துள்ளது. அதனை கண்ட மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து பிடித்து சென்று வீர்ரகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் நாயக்னேரி வனப்பகுதியில் விட்டனர்.


