News September 28, 2025
திருப்பத்தூர் காவல் துறை சார்பில் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட (28செப்) காவல்துறை பதிவு காவல் உதவி செயலி பொதுமக்கள் எந்த வித துயரம் அவசர நிலை ஏற்பட்டாலும் உடனடி உதவியை பெற அவசர எச்சரிக்கை அனுப்புவதற்கும் அதை கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடைய செய்வதற்கும் பயன்படுகிறது இதன் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன
காவல் அவசர உதவி எண் 100
பெண்கள் உதவி எண் 1091
குழந்தைகள் உதவி எண் 1098
போக்குவரத்து உதவி எண் 103 இந்த எண்ணிற்கு அணுகலாம்.
Similar News
News December 11, 2025
திருப்பத்தூர்: செக் மோசடி; பலே கில்லாடிகள் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி பகுதியில் கடந்த மாதம் சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(35), மதுமிதா(31) ஆகியோர் ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்துக்கு ரூ.3 கோடி காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து நில உரிமையாளர்கள் பழனி(36), சரோஜா(32) ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று(டிச.10) இரவு, கந்திலி போலீசார் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News December 11, 2025
திருப்பத்தூரில் மின்னணு இயந்திரங்கள் ஆய்வு

திருப்பத்தூரில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று (டிச.11) மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான இந்த ஆய்வு மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
News December 11, 2025
திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் காவல்துறையின் சார்பில் தினம்தோறும் ஓர் எச்சரிக்கை செய்தி வெளியிடப்படுகிறது. அவ்வாறு இன்று (டிச.11) வெளியிடப்பட்ட செய்தியில் Instagram-ல் லைக் போட்டால் பணம் கிடைக்கும் என்னும் விளம்பர குறுஞ்செய்தியை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு முதலில் சிறிய தொகையை கொடுப்பதுபோல் கொடுத்து பின்னர் பெரிய தொகையை திருடும் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


