News August 2, 2024
திருப்பத்தூர் காவல் துறை அறிவுரை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் அவர்களின் அறிவுறுத்தலின் மாவட்ட காவல்துறை இன்று காலை 11 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுமக்கள் ஒரே கடவுச்சொல்லை பல கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம். ஒரு கணக்கு சமரசம் செய்யப்பட்டால், மற்ற அனைத்தும் கணக்குகள் ஆபத்தாக இருக்கலாம். எனவே ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
Similar News
News October 31, 2025
திருப்பத்தூர் இளைஞர்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க

திருப்பத்தூரில் பெண்களுக்கு மட்டும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் அக்.31 நடைபெற உள்ளது. இதில்,18 முதல் 25 வயது வரை முகாமில் பங்கேற்கலாம். இந்த பணிக்கு 12-ம் வகுப்பு, ITI மற்றும் Diploma முடித்து இருக்கவேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. மாத ஊதியம் ரூ.13,500 – ரூ.16,000 வரை வழங்கப்படும். தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
News October 30, 2025
பார்வையற்ற மாற்று திறனாளிக்கு இசைக்கருவி வழங்கிய ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் கண் பார்வையற்ற மாற்று திறனாளி ஒருவர் தனக்கு இசை கருவி வேண்டுமென கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில் இன்று (அக்.30) மாவட்ட ஆட்சியர் சமூக (CSR) பங்களிப்பு நிதியில் இருந்து கொள்முதல் செய்த ரூ. 62000/- மதிப்பிலான இசைக்கருவியை ஆட்சியர் சிவசாவுந்திரவள்ளி அவர்கள் பயனாளிக்கு வழங்கினார்.
News October 30, 2025
ஜோலார்பேட்டை: தலை துண்டாகி வாலிபர் பலி

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 1 வது பிளாட்பாரம் அருகே சரக்கு ரயில் செல்லும் வழியில் இன்று (அக்.30) காலை 8 மணி அளவில் சரக்கு ரயில் முன் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இறந்தவர் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


