News January 21, 2026

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் வாராந்திர குறைத்தீர்வு கூட்டம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் பேரில் இன்று (ஜன.21) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 30 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள்.

Similar News

News February 1, 2026

திருப்பத்தூர்: வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

திருப்பத்தூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News February 1, 2026

திருப்பத்தூர்: தண்ணீரால் வந்த வினை!

image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அனுமுத்து. இவர் நேற்று (31.01.2026) அதேபகுதியில் உள்ள தனது, விவசாய நிலத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக, மின்சாரம் பாய்ந்து அனுமுத்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து வாணியம்பாடி காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News February 1, 2026

திருப்பத்தூர் தாய்மார்களுக்கு ரூ.11,000

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!