News November 22, 2025

திருப்பத்தூர்: காவலர் ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டம், நேற்று (நவ.21) இரவு – இன்று (நவ.22) காலை ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே அட்டவணைகள் உள்ளது. ரோந்து பணி 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இந்நேரத்தில் புகார் இருந்தால் உடனடியாக புகாரை தெரிவிக்கலாம்.

Similar News

News January 31, 2026

திருப்பத்தூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

திருப்பத்தூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 31, 2026

FACT CHECK: திருப்பத்தூரில் வெள்ளை காகம்?

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னாம் பேட்டை பகுதி, பங்களா தோப்பு மற்றும் சுற்றியுள்ள மரங்களில் வெள்ளை காகம் ஒன்று வந்து செல்வதாக சமூக வலைதளலங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் அது முற்றிலும் பொய், அந்த வீடியோ மார்ச்-2022ஆம் ஆண்டு சில செய்தியில் வெளி வந்துள்ளது. அதனை தற்போது வைரலாக்கி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News January 31, 2026

திருப்பத்தூர்: கல்லூரி பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து

image

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் கல்லூரி பேருந்து நேற்று (ஜன.30) கல்லூரி முடித்துவிட்டு, மாணவர்களை ஏற்றிக்கொண்டு, வாணியம்பாடி நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது சின்னமோட்டூர் அருகே முன்னால் பேனர் கம்பிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது திடீரென கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

error: Content is protected !!