News September 15, 2025

திருப்பத்தூர்: கனமழை எச்சரிக்கை!

image

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் செப்.,17ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 15, 2025

திருப்பத்தூர்: ரிசர்வ் வங்கியில் ரூ.1லட்சம் வரை சம்பளம்!

image

இந்தியாவின் வங்கிகளில் தலைமையாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பட இருக்கிறது. அதிகாரி (DR) General அதிகாரி போன்ற பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 55,000 முதல் 1,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-30குள் இந்த<> லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

News September 15, 2025

திருப்பத்தூர்: மர்ம மரணத்தில் வழக்கு பதிவு!

image

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றிய பெரியங்குப்பம் ஊராட்சி ஊராட்சி மேல் தெரு பகுதியை சேர்ந்த மணி மனைவி கன்னியம்மாள் வயது (69) கடந்த 10 தேதி வீட்டில் மாடி படிக்கட்டில் தவிர விழுந்து தலையில் பலத்த காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். சிகிச்சை பலனின்றி நேற்று செப்டம்பர் 14 மதியம் உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News September 15, 2025

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் இவரது மகன் நந்தகுமார் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், நேற்று (செ.14) நந்தகுமார் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் உள்ள மின்கம்பத்திலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!