News October 1, 2025

திருப்பத்தூர்: கணவன் கண் முன்னே மனைவி பலி!

image

தி.மலையிலிருந்து வாணியம்பாடிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த அமானுல்லா மற்றும் அவரது மனைவி ஷமீம், சிங்காரப்பேட்டை அருகே பெரிய ஏரிக்கரையில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி ஏரியில் பாய்ந்தனர். அருகிலிருந்தவர்கள் அமானுல்லாவை மீட்ட நிலையில், ஷமீம் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 1மணி நேரப் போராட்டத்திற்குப் பின், ஷமீமின் சடலம் மீட்கப்பட்டது. சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 4, 2026

திருப்பத்தூரில் உடல் தூக்கி வீசப்பட்டு கோர பலி

image

திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் மார்க்கத்தில் நேற்று (ஏப்.3) அதிகாலை 60-65 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 4, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 3) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

திருப்பத்தூர்: டூவீலர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!