News December 5, 2025

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு… உஷார்!

image

வேலூர் அடுத்த காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மஸ்தான் (வயது 45) என்பவர் நேற்று (டிச.4) அவரின் செல்போனை திருடியதை பார்த்து கையும் களவுமாக பிடித்து ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 5, 2025

திருப்பத்தூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

திருப்பத்தூர் மக்களே நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News December 5, 2025

திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம்; மிஸ் பண்ணாதீங்க!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் டிசம்பர் 06 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திருப்பத்தூர் ஒன்றியத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் முகாம் நடைபெறும். 40 வயதுக்கு மேற்பட்டோர், பெண்கள், தொழிலாளர் சமூகத்தினர் உள்ளிட்டோருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க.

News December 5, 2025

பாச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

image

குடியாத்தம் அடுத்த சந்தன பேட்டை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 35) இவர் இன்று (டிச.4) பாச்சல் அருகே ஆசிரியர் நகரில் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ரஞ்சித் குமார் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!