News October 3, 2025

திருப்பத்தூர்: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம், புங்கப்பட்டு நாடு பகுதி சேர்ந்த ஹரிஷ் , சூளகிரி பகுதியில் இருந்து வந்த லட்சுமி நாராயணன் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதி நேற்று மாலை படுகாயம் அடைந்தனர். விபத்துக்கு பின் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 3, 2025

திருப்பத்தூர்: மக்களே உஷார் !

image

திருப்பத்தூர் மாவட்ட (அக்-03) காவல் துறை சார்பில் போக்குவரத்து காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. அதன்படி சாலை விதிகளை கடைபிடித்து பொறுப்புடனும் பாதுகாப்புடன் சாலையில் செல்ல வேண்டும் “சாலைகளில் அவசர வேண்டாம்! நியமிக்கப்பட்ட பாதைகளில் செல்வோம், பாதுகாப்பாக பயணிப்போம்.”அவசரமாக சென்றாள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

News October 3, 2025

திருப்பத்தூர்: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க.

News October 3, 2025

திருப்பத்தூரில் இப்படி ஒரு சிறப்பான இடமா…?

image

திருப்பத்தூர், ஆண்டிப்பனுரில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோயில் குளத்தில் வேண்டுதலை நினைத்துக் கொண்டு வாழைப்பழத்தை குளத்தில் போட்டால் உடனடியாக மேலே வந்தால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறுமாம். மாறாகத் தாமதமாக மேலே வந்தால் தாங்கள் வேண்டுதலும் தாமதமாகத்தான் நிறைவேறுமாம். ஒருவேளை வாழைப்பழத் துண்டுகள் மேலே வராமல் உள்ளே சென்றுவிட்டால் நினைத்த காரியம் நிறைவேறாது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!