News October 17, 2025

திருப்பத்தூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News October 18, 2025

ஆம்பூர் பள்ளி மாணவிகள் அசத்தல்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான நேற்று (அக்.17) மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், ஆம்பூர் இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் வெள்ளி பதக்கம் , வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். பள்ளியின் சார்பாக மாணவிகளுக்கும், தயார்படுத்தும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.

News October 18, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்.17) இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 17, 2025

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு

image

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நாள்தோறும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் நிகில் குமார், இன்று ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

error: Content is protected !!