News October 5, 2025
திருப்பத்தூர்: ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News March 27, 2026
திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 27, 2026
திண்டாடும் திருப்பத்தூர் மக்கள்!

ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி ஊராட்சி பகுதிக்குட்பட்ட பொன்னேரி பகுதியில் பொதுமக்கள் கேஸ் பெறுவதற்காக கேஸ் அலுவலகம் முன்பு நேற்று (மார்.26) காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் பொன்னேரி, மூர்த்தியூர், பெரிய பொன்னேரி, ஏலகிரி மலை கூட்டு ரோடு, குன்னத்தூர் மண்டல வாடி, ஊர் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். உங்கள் பகுதியிலும் இதே நிலையா? கமெண்ட்ல சொல்லுங்க.
News March 27, 2026
வாணியம்பாடியில் உடல் தூக்கி வீசப்பட்டு பலி!

வாணியம்பாடி ரயில் நிலையம் விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று (மார்ச்.26) தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் மூதாட்டி உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


