News January 31, 2026

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் காந்தியடிகள் நினைவு நாள் அனுசரிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காந்தியடிகள் அவர்களின் 79வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் செந்தில்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

Similar News

News February 1, 2026

திருப்பத்தூர்: மதுபோதையில் நண்பரை கொன்ற கொடூரம்!

image

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், சாமிநாதபுரத்தைச் சேர்ந்த அப்புனு(40) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கோகுலை, ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News February 1, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10:00 மணி முதல் இன்று (பிப்ரவரி.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

திருப்பத்தூர் பெண்களுக்கு அரிய வாய்ப்பு – ரூ.3 லட்சம் மானியம்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!