News December 13, 2025
திருப்பத்தூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
Similar News
News December 18, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் சார்பில் தினமொரு விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டது வருகிறது. அவ்வாறு இன்று (டிச.18) பொது மக்கள் தங்களது வாகனங்களை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தினால் கவனம் சிதறடிக்கப்பட்டுப் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும் என்ற விழிப்புணர்வு செய்தி சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது.
News December 18, 2025
திருப்பத்தூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.
News December 18, 2025
திருப்பத்தூர்: பெற்ற தாயை அடித்து உதைத்த மகன்

கரும்பூர் பகுதியை சேர்ந்த தாமோதரன், மனைவி ரேணுகா (60). இவர்களது மகன் கோகுல்நாத் (43) கட்டட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். தாமோதரன் இறந்துவிட்ட நிலையில் தற்போது கோகுல்நாத், தனது தாயிடம் வீட்டை தனக்கு எழுதி தரக் கோரி நேற்று தகராறில் ஈடுபட்டு, அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். இந்த தகராறில் படுகாயமடைந்த ரேணுகா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று கோகுல்நாத்தை கைது செய்தனர்.


