News December 20, 2025
திருப்பத்தூர் ஆசிரியர்கள் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டம் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 6 அன்று ஊரகத் திறனாய்வு தேர்வு (TRUST) நடைபெற்றது. தேர்விற்கான தற்காலிக விடை குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் www. dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று (டிச.19) வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி அறிவித்துள்ளார்.
Similar News
News December 24, 2025
திருப்பத்தூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். ஷேர் செய்யுங்க
News December 24, 2025
திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 24, 2025
திருப்பத்தூர்: 50 பக்தர்களுடன் சென்ற பஸ் விபத்து!

திருப்பத்தூரில் இருந்து 50 பக்தர்களுடன் கூடிய தனியார் பஸ் மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை (டிச.24) வேலூர் அடுத்த அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


