News August 1, 2024
திருப்பத்தூர் அருகே 3 ஆடுகள் பலி

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி அய்யாசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணி.இவர் வீட்டில் 6 ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று கொட்டகையில் உள்ள ஆடுகளை அவிழ்த்து விட சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்த போது மூன்று ஆடுகள் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இறந்த ஆடுகள் சிறுத்தை கடித்து உயிரிழந்து இருக்குமா என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Similar News
News July 6, 2025
உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962559>>தொடர்ச்சி<<>>
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் பட்டியல்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
கலைஞர் உரிமைத்தொகை பெற சிறப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் கலைஞர் மகளீர் உரிமைத்தொகை பெறும்முகாம் மொத்தம் 209 முகாம்கள் நடைபெறவுள்ளது. இவை, ஜீலை 15ந் தேதி முதல் ஆகஸ்ட் 14ந் தேதி வரை 72 முகாம்களும், ஆகஸ்ட் 16ந் முதல் செப்டம்பர் 15ந் தேதி வரை 72 முகாம்களும் மற்றும் செப்டம்பர் 16ந் தேதி முதல் அக்டோபர் 15ந் தேதி வரை 65 முகாம்களும் நடைபெறவுள்ளது. நாள் ஒன்றுக்கு 6 முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.