News June 6, 2024
திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கும் மழை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜனதாபுரம் செட்டியப்பனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News September 14, 2025
திருப்பத்தூர: இன்று இரவு ரோந்து பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப் 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News September 13, 2025
வாகனங்களில் பயணிப்போருக்கு எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (13-09-2025) மாவட்ட மக்களுக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் ”மக்கள் தங்களின் பயணத்தின்போது ஜன்னல் வழியாக பயணிகள் கை, கால், தலையை நீட்டாதீர்கள் உங்களுடைய கவனக்குறைவால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” என எச்சரிக்கையாக இருக்க காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
News September 13, 2025
AIஅறிவியல் மாநாடு முன்னாள் விஞ்ஞானி பங்கேற்பு

திருப்பத்தூர் நகராட்சி சக்தி நகர் பகுதியில் உள்ள தூயநெஞ்ச கல்லூரியில் இன்று (செப்-13) AIஅறிவியல் மாநாடு நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். மேலும் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.