News April 4, 2024
திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

ஆம்பூர் அடுத்த கைலாச கிரி மலைப்பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் திடீரென தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலிாயனார். நேற்று நடந்த இச்சம்பம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த உம்ராபாத் போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 5, 2025
திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று இஸ்லாமியா ஆண்கள் கல்லூரி வாணியம்பாடி, திருப்பத்தூரில் காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
News July 5, 2025
துத்திப்பட்டு ஊராட்சி தலைவரின் அதிகாரம் ரத்து

ஆம்பூர் தாலுகா. மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் பல்வேறு முறைகேடு சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாகணேசன் மீது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் தொடர்ந்து கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சுவேதாவின் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை மாவட்ட ஏ.டி பஞ்சாயத்து அலுவலர் ரத்து செய்யது உத்தரவு பிறப்பித்தார்.
News July 4, 2025
இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருப்பத்தூரில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க