News April 3, 2025
திருப்பத்தூருக்கு பெயர் வைச்சவங்க இவங்களா?

ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திருப்பத்தூர் என பெயர் வந்தது என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் திருப்பத்தூரை பல மன்னர்களும் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், மாதவதுர்வேதி மங்களம், திருப்பேரூர், திருவனபுரம் என அவரவர் நம்பிக்கை ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்துள்ளனர். விஜய நகர மன்னர்சுள் கடைசியாக திருபுவனத்தை திருப்பத்தூர் என மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 22, 2025
ஆம்பூர்: ரயில் மோதி கொடூர பலி!

ஆம்பூர் அடுத்த வளத்தூர்-மேல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (டிச.22) 55 வயது மதிக்கத்தக்க முதியவர் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஒரு ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
News December 22, 2025
திருப்பத்தூர் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

திருப்பத்தூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
திருப்பத்தூர்: 8 வயது சிறுமி விபத்தில் பலி!

ஜோலார்பேட்டை, எஸ்.கோடியூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மகள் ஜோஷிகா (8) அப்பகுதியிலுள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்து சிறுமி சந்தைக்கோடியூரில் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


