News December 27, 2025
திருப்பத்தூரில் 24 குழந்தைகளுக்கு பாலியல் சீண்டலா?

திருப்பத்தூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு, 2025-ல் மொத்தம் 735 அழைப்புகள் வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் பள்ளி குழந்தைகள் பாலியல் தொல்லை குறித்து 24, குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்து 5, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கர்ப்பமாகியது குறித்து 56, குழந்தைகளின் புகைப்படத்தை மார்பிங் செய்தது குறித்து 5, குழந்தை திருமணம் தொடர்பாக 111 அழைப்புகள் பெறப்பட்டுள்ளது.
Similar News
News January 26, 2026
திருப்பத்தூர்: டிகிரி முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த<
News January 26, 2026
ரூ1.13 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள்!

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகத்தில் இன்று நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக 97 பயனாளிகளுக்கு ரூ 1.13 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்டங்களை மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, மகளிர் திட்ட அலுவலர் விஜயகுமாரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் பலர் பங்கேற்றனர்.
News January 26, 2026
சிறப்பாக பணியாற்றிய மல்லகுண்டா விஏஓ-க்கு சான்றிதழ்!

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் கிரவுண்டில் இன்று நடைபெற்ற 77 வது குடியரசு தின விழாவில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அந்த வகையில் மல்லகுண்டா விஏஓ சந்திரமோகனுக்கு சிறந்த பணிக்கான நன்மதிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


