News October 2, 2024

திருப்பத்தூரில் 208 ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 208 ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணியளவில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் வைத்து கிராமசபை கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News

News July 9, 2025

சரக்கு வாகனம் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

image

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது சரக்கு வாகனம் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? (1/2)

image

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், திருப்பத்தூரில் 32 பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்சம் 10th வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (4179–222111) தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17002076>>தொடர்ச்சி<<>>

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/2)

image

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️கட்டாயம் மொழிப்பாடமாக தமிழை படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்.
▶️மேலும் தகவலுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!