News March 24, 2025
திருப்பத்தூரில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா குகை

ஆம்பூருக்கு அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா மலைக்குகை அமைந்துள்ளது. சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த குகையில், பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்களில் சமணக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்கள் உள்ளன. 1882ஆம் ஆண்டு, ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவெல் இதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 23, 2026
திருப்பத்தூர்: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

திருப்பத்தூர் மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <
News January 23, 2026
திருப்பத்தூர்: தின்னரை குடித்த குழந்தை

ஜோலார்பேட்டை அடுத்த பக்கிரிதக்கா இந்திரா நகர் சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மெளலிஷ்வரன் என்ற குழந்தை நேற்று (ஜன.22) வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் தின்னர் எடுத்து தவறுதலாக குடித்து விட்டது. இதனால் குழந்தை அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் குழந்தை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
News January 23, 2026
ஆம்பூர் அருகே ஓடும் ரயிலில் அடிப்பட்டு வாலிபர் பலி

ஆம்பூர் பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (ஜன.22) சுமார் 40 வயது தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உடற்பயிற்சி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இவரது கையில் 14 என்ற எண் பச்சை குத்தப்பட்டுள்ளது.


