News November 15, 2024

திருப்பத்தூரில் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பத்தூர் அடுத்த ஸ்ரீ விஜய்சாந்தி ஜெயின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நாளை (நவ.16) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 04179-222033 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News March 3, 2026

திருப்பத்தூர் கலெக்டர் ஆபிசில் குவிந்த மனுக்கள்!

image

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மொத்தம் 768 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 3 மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 470 கல்வி கடன் உதவி, ஒருவருக்கு இ-பட்டா. 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவசவுந்தரவல்லி வழங்கினார். மேலும் மற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

News March 3, 2026

ஜோலார்பேட்டையில் தட்டி தூக்கிய திமுக!

image

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி நேற்று திமுகவில் இணைந்தனர். ஜோலார்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியச் செயலாளர் கவிதா தண்டபாணி தலைமை தாங்கினார். இச்சம்பவம் அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 3, 2026

திருப்பத்தூர்: பெண்ணிடம் அத்து மீறியவருக்கு தர்ம அடி!

image

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அருகே நேற்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மூவர், தனியாக இருந்த 30 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றனர். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், தப்பியோட முயன்றவர்களில் ஒருவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்ற இருவரை நாட்டறம்பள்ளி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!