News August 6, 2025
திருப்பத்தூரில் வள்ளுவர் சிலை திறப்பு

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வம் மாலை அணிவித்து திறந்து வைத்தார். உடன் செஞ்சிலுவை சங்க திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கிஷோர் பிரசாத் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News August 7, 2025
திருப்பத்தூர்: ஆம்புலனஸில் பிறந்த பெண் குழந்தை

ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியை சேர்ந்த பெண் பிரசவத்திற்க்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களை பலர் பாராட்டி வருகின்றனர்.
News August 7, 2025
JUST NOW: திருப்பத்தூருக்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நாளை (ஆக.08) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஆக.07) திருப்பத்தூர் உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகமொத்தம் மழை வெளுத்து வாங்க போகிறது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 7, 2025
திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் போதும் SBI வங்கியில் வேலை!

திருப்பத்தூர் மக்களே SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <