News November 6, 2025
திருப்பத்தூரில் ரூ.3 லட்சம் மோசடி!

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று(நவ.5) நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட லக்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் எனும் தொழிலாளி, தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கடந்த 2023ஆம் ஆண்டு ரூ. 3 லட்சம் பணத்தை வாங்கிய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்தார்.
Similar News
News November 6, 2025
திருப்பத்தூர்: பெண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News November 6, 2025
திருப்பத்தூர்: பள்ளிகளுக்கு லீவ் விட்டாச்சு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காலையிலேயே பள்ளிக்கு கிளம்பிய மாணவர்கள் கொத்து, கொத்தாக மழையில் நனைந்தபடி வீடு திரும்பும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. உங்க ஏரியாவுல மழை பெய்யுதா..? பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க!
News November 6, 2025
வாணியம்பாடி: இளம்பெண் வீட்டிலேயே சடலமாக மீட்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியில் சுந்தரகுமார் என்பவருடைய மனைவி பவித்ரா, திருமணம் ஆகி 4 ஆண்டுகளான நிலையில், இன்று (நவ.06) காலை வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து உறவினர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


