News July 14, 2024
திருப்பத்தூரில் மழை

திருப்பத்தூரில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஜெய்பீம் நகர், வள்ளுவர் நகர், பாச்சல், ஆசிரியர் நகர், அச்சமங்கலம் ஆகிய பகுதிகளில் நண்பகல் முதல் சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள குளிர்ந்த சூழலால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News July 7, 2025
காவல்துறையின் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பதிவு

திருப்பத்தூர், கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆணைக்கிணங்க திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் முகநூல் வாசிகளுக்கு விழிப்புணர்வு செய்தி பதிவிடப்பட்டது. அதன்படி, Cyber Scam: உங்கள் நண்பரின் முகநூல் பக்கத்திலிருந்து அவசர தேவை எனக்கூறி பணம் கேட்டு செய்தி வந்தால் நம்ப வேண்டாம். அவ்வாறு தங்களுக்கு ஏதேனும் செய்தி வந்தால் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையை தொடர்புகொள்ள தெரிவித்துள்ளது.
News July 7, 2025
திருப்பத்தூர் இளைஞர்களே இந்திய கடற்படையில் நல்ல வேலை!

இந்திய கடற்படையில் நர்ஸ், பார்மசிஸ்ட், கேமராமேன், ஸ்டோர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th முதல் பொறியியல் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000- 1,42,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். திருப்பத்தூரில் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News July 7, 2025
ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம் (1/2)

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<