News September 3, 2025
திருப்பத்தூரில் மதுக்கடைகள் விடுமுறை

திருப்பத்தூரில் வருகிற 5 ஆம் தேதி மீலாடி நபி விழாவை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், சொகுசு விடுதிகளுக்கு விடுமுறை அளிக்க ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி உத்தரவிட்டார். இதனை மீறி மது விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு இன்று (செப்-3) வெளியானது.
Similar News
News September 5, 2025
திருப்பத்தூர்: தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி

நாட்றம்பள்ளி சேர்ந்த அகிலன் இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் இவருக்கு திருமணம் ஆகி மனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செப்-03 விடுமுறைக்கு வந்தவர், நேற்று நாட்டறம்பள்ளி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News September 5, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (செப்டம்பர் 04) 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
திருப்பத்தூர் நகர் பகுதியில் 6 ஆம் தேதி மின்நிறுத்தம்

திருப்பத்தூர் மின்பகிர்மானம் 110/33 கி.வோ துணை மின்நிலையத்திற்குட்பட்ட திருப்பத்தூர் டவுன், ஹவுசிங்போர்டு, ஆசிரியர்நகர் திரியாலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 06.09.25 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகாரணமாக காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என திருப்பத்தூர் செயற்பொறியாளர் சம்பத்து அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும் அறிவுறுத்தினார்.