News December 9, 2024
திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைப்பெறுகிறது. இந்நிலையில் டிசம்பர் மாத இரண்டாவது வார மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (09.12.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெறும் எனவும், இதில் பங்கேற்று பொதுமக்கள் தங்களது மனுவை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News March 3, 2026
ஜோலார்பேட்டையில் தட்டி தூக்கிய திமுக!

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி நேற்று திமுகவில் இணைந்தனர். ஜோலார்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியச் செயலாளர் கவிதா தண்டபாணி தலைமை தாங்கினார். இச்சம்பவம் அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 3, 2026
திருப்பத்தூர்: பெண்ணிடம் அத்து மீறியவருக்கு தர்ம அடி!

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அருகே நேற்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மூவர், தனியாக இருந்த 30 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றனர். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், தப்பியோட முயன்றவர்களில் ஒருவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்ற இருவரை நாட்டறம்பள்ளி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News March 3, 2026
திருப்பத்தூர் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


