News March 21, 2025

திருப்பத்தூரில் நாளை புத்தகத் திருவிழா ஆரம்பம்

image

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்கம் சார்பில் நாளை(மார்.22) காலை 10 மணியளவில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் உள்ளாட்சித் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். புத்தக பிரியர்களுக்கு  இச்செய்தியை பகிருங்கள்.

Similar News

News September 22, 2025

திருப்பத்தூரில் இன்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள் தின மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் இன்று (22-09-2025) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் வசதி, தார் சாலை வசதி, மற்றும் தெருவிளக்கு, ஆகியவற்றை மனு அளித்து பொதுமக்கள் பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 21, 2025

திருப்பத்தூரில் அதிகபட்சமாக 13.40 மி.மீ மழைபொழிவு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 13.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாட்டறம்பள்ளி 4 மி மீ மழையும், நாட்றம்பள்ளியில் 4 மி.மீ, ஆலங்காயம் பகுதியில் 5.10 மி.மீ, திருப்பத்தூரில் 13.40 மி.மீ, ஆகிய இடங்களில் மழை பெய்தது பதிவாகியுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 21, 2025

திருப்பத்தூர்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செ. 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!