News September 6, 2025
திருப்பத்தூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் தலைவர் இரானியப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், நவம்பர் மாத இறுதிக்குள் காலி மது பாட்டல்களை திரும்ப கூறும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது.
Similar News
News September 7, 2025
திருப்பத்தூர் : தெரு நாய்கள் தொல்லையா? இதை பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே, நமது மாவட்டத்தில் நகராட்சி அலுவலகத்தின் எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை, குப்பைகள் அகற்றப்படவில்லை, குடிநீர் வரவில்லை, சாலை, மேம்பாலம் சேதம் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவித்து தீர்வுகளை பெறலாம்.
▶️ திருப்பத்தூர் – 9443548047
நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News September 7, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தேசிய அடையாள அட்டையை வழங்கினார். இதனால், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிகழ்வில், அரசியல் பிரமுகர்களும், கோட்டாட்சியரும் உடனிருந்தனர்.
News September 7, 2025
திருப்பத்தூரில் நாளை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நாளை காலை (செப்-8) 10 மணிக்கு தொடங்குகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் வசதி, தார் சாலை வசதி, தெருவிளக்கு, ஆகியவற்றை புகார் மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.