News December 16, 2025
திருப்பத்தூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (டிச.20) இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் வர உள்ளனர். கலந்து கொள்ள விரும்புவார்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யலாம்.
Similar News
News December 17, 2025
திருப்பத்தூர்: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

திருப்பத்தூர் மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 17, 2025
திருப்பத்தூர்: ஆட்டோ டிரைவர் மனைவிக்கு ரூ.1,63,00,000 GST!

வாணியம்பாடி, நேதாஜி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது பாஷா, மனைவி சாயிதா. இவர் அப்பகுதி அரசு வங்கிக்கு பணம் எடுக்க சென்ற போது வாங்கி மேலாளர் சாயிதாவின் பெயரில் சென்னையில் நிறுவனம் ஒன்று இயங்கி வருவதாகவும், அதற்கு ரூ.1,63,00,000 GST வரி பாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சாதாரண ஆட்டோ டிரைவர் மனைவிக்கு இத்தனை கோடி வரி வந்தது அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News December 17, 2025
திருப்பத்தூர்: சாலையை கடக்க முயன்ற சிறுமி மீது மோதிய பைக்!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகள் ஜோஷகா (8) என்பவர் சந்தைக்கோடியூர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது டூவீலரில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து வாணியம்பாடியை நோக்கி சென்ற போது, சிறுமி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


