News January 2, 2026

திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம்!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், சென்னை கேசவன் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் போக்குவரத்து ஆய்வாளர்கள் இருந்தனர்.

Similar News

News January 22, 2026

திருப்பத்தூரில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

ஆம்பூர் அருகே விபத்து; ஒருவர் பலி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் செங்கிளி குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஜன.15ஆம் தேதி நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்(40) கூலி தொழிலாளி வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி பைக்கில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

News January 22, 2026

திருப்பத்தூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!