News January 14, 2026

திருப்பத்தூரில் இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்புகள்

image

திருப்பத்தூரில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வாழிகாட்டுதல் மையத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி, கோடியூர் மைதானத்தில் ஜனவரி 26 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.

Similar News

News January 26, 2026

திருப்பத்தூர்: வீடு கட்டப்போறீங்களா? இது முக்கியம்!

image

திருப்பத்தூர் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

திருப்பத்தூர் மக்கள் கவனத்திற்கு – ஆட்சியர் அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில், வருகின்ற வெள்ளிக்கிழமை ஜனவரி.30 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில், காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள விவசாய பொதுமக்கள், வேளாண்துறை சார்ந்த மக்கள், அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் அறிவுரை.

News January 26, 2026

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் வாழ்த்து

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தில் மகத்துவம் அறிந்து அதனை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தன்னுடைய நாட்டிற்கும் ஏதாவது நல்லது செய்தல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குடியரசை போற்றுவோம் நாட்டின் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!