News August 24, 2024
திருப்பத்தூரில் இருந்து வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 11 மணியளவில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திருப்பத்தூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் செஞ்சிலுவை சங்க தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தினர்.
Similar News
News August 9, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் 95.60 மில்லிமீட்டர் மழை பொழிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று (ஆக.08) கனமழை பெய்த நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆம்பூரில் 24.20 மில்லி மீட்டர் மழையும், வாணியம்பாடி பகுதியில் 18மில்லி மீட்டர் மழை என மாவட்டத்தில் மொத்தம் 95.60மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. மேலும் மழையால், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இன்று (ஆக.09) தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் இன்று (ஆக .09) காலை 10 மணியளவில் திருப்பத்தூர்- குரும்பர் தெரு, உடைய முத்தூர், நாட்றம்பள்ளி- கோனாபட்டு, வாணியம்பாடி- கிருஷ்ணாபுரம், ஆம்பூர்- பச்சகுப்பம் ஆகிய நியாய விலை கடைகளில் இந்த முகாம் நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், புதிய அட்டை விண்ணப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். ஷேர் பண்ணுங்க
News August 9, 2025
BREAKING: திருப்பத்தூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆக.09) கனமழை காரணமாக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து விடுமுறை என்பதை தெரியப்படுத்துங்கள்.