News July 1, 2024
திருப்பதி ரயில் ரத்து

திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் திருப்பதி – விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16853), திருப்பதி- காட்பாடி இடையே இன்று முதல் ஜூலை 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
விழுப்புரத்தில் சோகம்: வயிற்று வலியால் தற்கொலை!

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டபாணி, நீண்டகால வயிற்று வலியால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அவர் உட்கொண்டார். முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
விழுப்புரம்: வாகனம் மோதி மூதாட்டி துடிதுடித்து பலி

விழுப்புரம், மேல்மலையனூர் அருகே தேவனூர் புற்றுக்கோவில் பகுதியில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிராம நிர்வாக அலுவலர் புகாரின்பேரில், வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டியின் அடையாளம் & விபத்தை வாகன ஓட்டி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
விழுப்புரம் காவல்துறையின் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


