News December 17, 2025
திருப்பதி போக பிளான் இருக்கா? இதோ டிக்கெட்!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட் நாளை தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு டிச. 24-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை பெறவும், மேலும் விவரங்களை அறியவும் இங்கே <
Similar News
News December 22, 2025
கையை கடிக்கும் செல்போன் ரீசார்ஜ்!

நமது 6-வது விரலாகவே செல்போன் மாறிவிட்டது. 4-6 பேர் கொண்ட குடும்பத்தில், செல்போன், Internet-க்கு சராசரியாக மாதம் ₹2000 வரை செலவாகிறது. நெட் பயன்படுத்தாத சில கிராமப்புற மக்கள் கூட மாதந்தோறும் மினிமம் ரீசார்ஜ் (₹200-₹300) செய்ய வேண்டியுள்ளது. அப்போதுதான் BANK, GAS உள்ளிட்ட OTP வரும். ₹30,000 சம்பாதிக்கும் குடும்பத்தில் 6% வரை இதற்கே செலவாகிறதாம். நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க?
News December 22, 2025
பொங்கல் பரிசாக ₹5,000 கொடுங்க: EPS கூறும் காரணம்

திமுக, மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் மக்கள் மனம் குளிர, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ₹5,000 வழங்க வேண்டும் என EPS கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் இருந்த போது நாங்கள் ₹2,500 வழங்கினோம். அப்போது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், ஏன் ₹5,000 வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். அதே கோரிக்கையை இப்போது நாங்கள் வைக்கிறோம் என்றார்.
News December 22, 2025
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

20 நாள்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையின் மேல் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையின் மேல் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஆனாலும், தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மலைக்கு செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


