News January 9, 2025

திருப்பதியில் உயிரிழந்தவர்களுக்கு நெல்லை முபாரக் இரங்கல்

image

எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்ட அறிக்கையில் திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன சீட்டு வாங்குவதற்கு வரிசையில் நின்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக வெளியான செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Similar News

News January 25, 2026

அம்ரித் பாரத் ரயிலுக்கான கட்டணங்கள் அறிவிப்பு

image

வள்ளியூர் திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம் வரை அம்ரித் பாரத் ரயில் வாராந்திர சேவையாக இயக்கப்படுகிறது. இதன் முதல் ரயில் 28ம் தேதி தாம்பரத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ரயிலுக்கு நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் 420 ரூபாய், பொதுப்பெட்டியில் பயணிக்க கட்டணம் 240 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

News January 25, 2026

நெல்லை: பிளேடால் கழுத்தை அறுத்த வாலிபர் உயிரிழப்பு

image

சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் இசை ராஜா (19). இவர் கடந்த 22ம் தேதி இரவு மதுபோதையில் திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இவரை மீட்டு சேரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதானல் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேரை போலீசார் விசாரனை.

News January 25, 2026

நெல்லை: விபத்தில் இளைஞர் தலை நசுங்கி பலி

image

நெல்லை மாவட்டம் பத்தமடை கோபாலன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மகாராஜன் (25). தனியார் நிறுவன ஊழியர். இவர் தன் நண்பர் மாரியுடன் நேற்று இரு சக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை சென்ற போது பத்தமடை அருகே பிரான்சேரி பகுதியில் லாரியை முந்தி சென்ற போது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த மகாராஜன் தலை நசுங்கி பலியானார். இதுகுறித்து மேல செவல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!