News March 24, 2024
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நடுக்கம் தீர்த்த பெருமான் எனும் கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. சரபேஸ்வரர் தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில் உருத்திர பாத திருநாள் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் சாமி வீதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Similar News
News November 15, 2025
தஞ்சை: வெளிநாட்டு வேலை மோசடி-4 பேர் கைது

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்ட இளைஞர்களை மியான்மர் அழைத்து சென்று மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ராஜ்குமார், மணவாளன், தீபக், அபிஷேக்ராஜன் ஆகிய 4 ஏஜென்ட்கள் தஞ்சையில் கைது செய்யப்பட்டனர். மேலும் சமீபத்தில், சுற்றுலா விசா மூலம் மியான்மர் கலவரப் படையில் சேர்க்கப்பட்ட 35 தமிழர்கள் உட்பட 465 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தஞ்சை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 15, 2025
தஞ்சை: 31,000 கிலோ உரங்கள் பறிமுதல்

புதுப்பட்டினம் பகுதியிலுள்ள கிடங்கில் வேளாண் துறை உதவி இயக்குநர் செல்வராசு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில் 30 ஆயிரத்து 970 கிலோ குருணை வடிவிலான உரமும், அரை லிட்டர், ஒரு லிட்டா் பாட்டில்களில் திரவ வடிவில் 550 லிட்டர் உரங்களுக்கு உரிமம் பெறப்படவில்லை என்பதால் காவல் நிலையத்தினர் முன்னிலையில் ரூ.62.25 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள், உர பாட்டில்களை இயக்குநர் செல்வராசு பறிமுதல் செய்து, சீல் வைத்தார்.


