News September 18, 2025
திருபபத்தூர்: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவசெளந்திரவல்லி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறு வியாபாரிகள் தங்களுடைய பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் நபர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
திருப்பத்தூர் கலெக்டர் ஆபிசில் குவிந்த மனுக்கள்!

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மொத்தம் 768 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 3 மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 470 கல்வி கடன் உதவி, ஒருவருக்கு இ-பட்டா. 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவசவுந்தரவல்லி வழங்கினார். மேலும் மற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
News March 3, 2026
ஜோலார்பேட்டையில் தட்டி தூக்கிய திமுக!

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி நேற்று திமுகவில் இணைந்தனர். ஜோலார்பேட்டையில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியச் செயலாளர் கவிதா தண்டபாணி தலைமை தாங்கினார். இச்சம்பவம் அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 3, 2026
திருப்பத்தூர்: பெண்ணிடம் அத்து மீறியவருக்கு தர்ம அடி!

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அருகே நேற்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மூவர், தனியாக இருந்த 30 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றனர். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், தப்பியோட முயன்றவர்களில் ஒருவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்ற இருவரை நாட்டறம்பள்ளி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


