News February 27, 2026
திருநெல்வேலி: 2 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடி

நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணம் தொடர்பான தகராறில், ரவுடி பேச்சிமுத்து (37) உள்ளிட்டோர் அரிவாளால் ஊழியர் சந்திரன் (49) மற்றும் டிரைவர் தளவாய்பாண்டியன் (31) ஆகியோரை வெட்டிவிட்டு தப்பினர். பெருமாள்புரம் போலீஸ் நிலையம் விசாரணையில் பேச்சிமுத்து மீது முன்கூட்டியே வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தலைமறைவான 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News February 28, 2026
நெல்லை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பு: களக்காடு விநாயகர் கோவில் சிலை சேதப்படுத்தப்பட்ட விவாகரத்தில், மது போதையில் குற்றவாளிகள் செயல்பட்டது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு எந்த பின்னணியும் இல்லை. உறுதி செய்யப்படாத தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 28, 2026
திருநெல்வேலி தொகுதியில் அறிவிப்புக்கு முன்னே பிரச்சாரம்

சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, பாஜகவினரால் “நயினார் நாகேந்திரன்—தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உருவாகியுள்ளது.
News February 28, 2026
நெல்லை: காதல் மனைவியை கொலை செய்த கணவர் கைது

பாளை, கீழநத்தம் கிருபா நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சதீஷ் தனது காதல் மனைவி தமிழ்ச்செல்வியோடு ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்து தமிழ்ச்செல்வியை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த பாளை தாலுகா காவல் ஆய்வாளர் சசிகுமார் மற்றும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலை செய்த காதல் கணவர் சதீஷை நேற்று கைது செய்தனர்.


