News March 23, 2024
திருநெல்வேலி வீரருக்கு குவியும் பாராட்டு!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 70வது சீனியர் நேஷனல் ஆண்கள் கபாடி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு மாநில அணியில், நெல்லை மாவட்டம் பணகுடியை சார்ந்த கபடி வீரர் ஹரிஹரன் தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து கபடி வீரர் ஹரிஹரனுக்கு நெல்லையை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
1.18 லட்சம் யூனிட் மின் உற்பத்தி கூடங்குளம் சாதனை

கூடன்குளம் 2 அணு உலைகள் மூலம் இதுவரை 1.18 லட்சம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என அணு மின் நிலைய இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1வது அணு உலை மூலம் 65,985 மில்லியன் யூனிட்களும், 2வது அணு உலை மூலம் 52,211 மில்லியன் யூனிட்களும் உற்பத்தி செய்யப்பட்டு, 1வது அணு உலை 300 நாட்களும், 2வது அணு உலை 400 நாட்களுக்கு மேலாக இயங்கி வருகிறது.
News August 17, 2025
நெல்லை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் நெல்லை மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 8220387754 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!
News August 17, 2025
நெல்லை: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க!

நெல்லை மக்களே! சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து வேலைக்கு செல்கீறீர்களா? அரசு கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க..இங்கு <