News April 14, 2025

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் நீடிப்பு

image

திருநெல்வேலியில் இருந்து தென்காசி, கடையநல்லூர் ராஜபாளையம் விருதுநகர் வழியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 13ஆம் தேதி இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Similar News

News September 28, 2025

தென்காசியில் ரூ.69.49 கோடி ஒதுக்கீடு

image

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ.69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமை வகித்த அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்ணீர் விடும் சமயங்களில் பெரும்பாலான வீடுகளில் மோட்டார் மூலம் நீர் பிடிப்பதால் தட்டுப்பாடு நிலவுவதாக சாதிர் கூறினார்.

News September 28, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (27-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

News September 27, 2025

தென்காசி எம்‌.பி-க்கு வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் திமுக தேர்தல் பொறுப்பாளராக தென்காசி எம்.பி., டாக்டர். ராணி ஸ்ரீகுமார்-ஐ நியமனம் செய்யபட்டு உள்ளார். இன்று மாநில வர்த்தக அணி நிர்வாகி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி தலைமையில் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி கேபிள் கணேசன் உள்ளிட்ட திமுகவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!