News October 12, 2025

திருநெல்வேலி மாவட்ட பெற்றோர்கள் மறந்துவிடாதீர்கள்

image

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் இன்று (அக்.12) நடைபெறுகிறது. நாளை காலை 9.15 மணிக்கு பாளையங்கோட்டை காவலர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் பார்வையிட்டு தொடங்கி வைக்க உள்ளார். இதில் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். *ஷேர் பண்ணுங்க

Similar News

News October 12, 2025

நெல்லை: துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மயில் சடலம்

image

நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மயில் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து மகேஷ் என்பவர் தெரிவித்த தகவலின் படி பணகுடி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கே வீட்டின் பக்கவாட்டுக்கு சுவரிலும் குண்டு பாய்ந்த தடம் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News October 12, 2025

நெல்லை: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

image

நெல்லை மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது
<>E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். *பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க*.

News October 12, 2025

வீடு கட்ட புதிய RULES – நெல்லை மாநகராட்சி

image

நெல்லை மாநகர எல்லைப் பகுதியில் மாசு ஏற்படுவதை தடுக்கவும் சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்யவும் இனி புதிய வீட்டுமனைகள் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் பெற விண்ணப்பிக்கும் போது அந்த இடத்தில் மரக்கன்று ஒன்றை நடவு செய்து அதற்கான புகைப்படத்தையும் எடுத்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நெல்லை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!