News March 3, 2026

திருநெல்வேலி: மாதம் ரூ.3,000 ..! இந்த கார்டு உள்ளதா?

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 4, 2026

நாங்குநேரி சம்பவம்; பொதுமக்கள் ஏன் உதவவில்லை? – விளக்கம்

image

நாங்குநேரியில் சாலையில் செல்பவர்களை அரிவாளால் வெட்டி கொடூர தாண்டவம் ஆடிய கும்பல் பைக்குகளில் மஞ்சங்குளத்திற்கு சென்றனர். அங்கு ஒருவரின் பெயரை(அவரது சமூகத்துடன்) சத்தமாக கூறி வாழ்க கோசமிட்டனர். அப்போது பைக்கில் இருந்து ஒருவர் கீழே விழுந்தார். அவரை தூக்கி விட முயன்ற அப்பகுதி மக்களை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் உதவிக்கு வந்தவர்களும் ஓட்டம் பிடித்தனர் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.

News March 4, 2026

நாங்குநேரி சம்பவத்தில் வெட்டுப்பட்டவருக்கு 5 மணி நேர ஆபரேஷன்

image

நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கணேசன் என்பவர் உயிருக்கு போராடி வருகிறார். இவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். நெல்சனின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவருக்கு நேற்று 5 மணி நேரத்திற்கு மேல் ஆபரேஷன் நடந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

News March 4, 2026

நெல்லையில் சினிமா பாணி சம்பவம்; 60 பேரிடம் சோதனை

image

பாளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று திருச்செந்தூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் கோட்டுரை சேர்ந்த நம்பி அம்மாள் என்ற மூதாட்டி ஏறினார். பஸ் சற்று தொலைவில் உள்ள கோர்ட்டை கடந்து சென்றபோது மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் நகை திருட்டு போனதாக சத்தம் போட்டார். டிரைவர் பேருந்தை பாளை ஸ்டேஷனிற்கு ஓட்டி வந்தார். குற்றப்பிரிவு போலீசார் 60 பயணிகளிடம் சோதனை நடத்தினர். நகைகள் சிக்கவில்லை.

error: Content is protected !!