News April 16, 2024
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் வழக்கு தள்ளுபடி

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவை எதிர்த்து வழக்கறிஞர் மகாராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (ஏப்.16) நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் நடவடிக்கை முடியும் தருவாயில் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 30, 2026
நெல்லை: ஜவுளி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

வள்ளியூர் அருகே புதூரைச் சேர்ந்த அரவிந்தன்(28) ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரும், அவரது நண்பர்களான டேவிட்(20), பொன்ராஜ்(25) ஆகிய 3 பேரும் ஒன்றாக மது அருந்திய போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாலை புதூரில் அரவிந்தன் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த டேவிட், பொன்ராஜ் ஆகியோர் அரவிந்தனை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
News January 30, 2026
நெல்லை: கோயிலில் திருடிய நபருக்கு 3 ஆண்டு சிறை

நெல்லை உத்தம பாண்டியன்குளம் கிராமத்தில் உள்ள கோவிலில் திருடிய வழக்கில் நீதிமன்றத்தால் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறுமுகம்(48) மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம், கோவிலில் திருடிய குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயசங்கர குமாரி தீர்ப்பளித்தார்.
News January 30, 2026
நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் – தேமுதிக பொதுச்செயலாளர்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று(ஜன.30) நெல்லை வருகிறார். தாழையூத்து அமேகா பேலஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் பூத் முகவர்களை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார். கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


