News August 11, 2025
திருநெல்வேலி காங்கிரஸ் எம்பி இன்று திடீர் கைது

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து இன்று ஆகஸ்ட் 11 டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தினர். இதில், நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டார். எம்பிக்கள் உடன் அவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார்.
Similar News
News August 11, 2025
நெல்லையில் வயிற்றுவலி தீர்க்கும் வேப்பிலைப் பிரசாதம்

கங்கைகொண்டான் அருகே வடக்கு செழியநல்லூரில் சயன வனதுர்கை, வைஷ்ணவி துர்கை அம்பாள் கோயில் உள்ளது. இங்கு மகாலிங்க மரம் மற்றும் வேப்ப மரத்தின் அடியில் கிழக்கு நோக்கி சயன கோலத்தில் 8 கரங்களுடன் பெண் குழந்தையை அணைத்தபடி காட்சிதருகிறாள் துர்கை. இங்குள்ள வேப்ப மரத்தின் இலையை அரைத்து சாறு எடுத்துக் குடித்தால், வயிற்றுவலி பாதிப்புகள் நீங்கும். இங்கு தாழம்பூ குங்குமத்துடன், வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது.
News August 11, 2025
நெல்லை: உள்ளூரில் வேலை… இன்றே கடைசி நாள்.. Apply

நெல்லை மாவட்ட மருத்துவத்துறையில் செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட 45 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8, 10, 12ம் வகுப்பு, B.Pharm, B.Sc, BDS, D.Pharm, Diploma, DMLT, M.Sc, Nursing படித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் இப்பணிகளுக்கு தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இன்றே கடைசி நாள் என்பதால் <
News August 11, 2025
நெல்லையில் பள்ளிக்கு விடுமுறை…

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள திலகர் வித்யாலயா பள்ளி நிர்வாக குழு தலைவர் ராகவன் மறைவையொட்டி, இன்று (ஆகஸ்ட்-11) மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளி நிர்வாகம் இன்று வெளியிட்டது. விடுமுறைக்கான நாள் மற்றொரு நாளில் ஈடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.