News February 25, 2026

திருநெல்வேலி: அரசு அதிகாரியை வெட்டி கொன்ற விவகாரம்

image

மூலைக்கரைப்பட்டி, ஆணையப்பபுரம் சேர்ந்த பத்திரப்பதிவு எழுத்தர் சுந்தர்(37) (பிப்.23) டூவீலரில் சென்றபோது, இருவர் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்த சகோதர்களான மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (37), தம்பி சுடலை (34) போலீசில் சரணடைந்தனர். பெண் தொடர்பான தகராறால் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News March 1, 2026

நெல்லை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<> SANCHAR SAATHI <<>>என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE IT.

News March 1, 2026

நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரதமரை வரவேற்க கூட்டம்

image

பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டணி மாநாட்டில் கலந்து கொள்கிறா‌ர். தமிழகம் வர உள்ளதால் நெல்லை எம்எல்ஏ நைனார் நாகேந்திரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறா‌ர். மாநாட்டு திடலில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் மற்றும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் முருகன், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

News March 1, 2026

திருநெல்வேலி: பெண் உட்பட 4 பேர் குண்டாஸில் கைது

image

நெல்லை மாவட்டம், தாழையூத்து திருக்குறுங்குடி, மானூர் மற்றும் வீரவநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் பேராட்சி செல்வி, சண்முகசுந்தரம், மாரிமுத்து, கோயில்ராஜை போலீசார் கைது செய்தனர். நெல்லை எஸ்பி பிரசன்ன குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். பேராட்சி செல்வி மதுரை பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!